2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மழைபெய்யும் வரை தொடர்ந்து மின் வெட்டு

Freelancer   / 2022 மார்ச் 07 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மீண்டும் மழை பெய்யும் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர், நாளை (08) முதல் இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு காலம் மட்டுப்படுத்தப்படும் என்றார்.

தேவையான எரிபொருள் இருப்புக்களை வழங்கினால் மின்வெட்டு காலத்தை குறைக்க முடியும் எனவும் நிலக்கரி கையிருப்பு தொடர்பில் எந்த கவலையும் இல்லை என்று குறிப்பிட்டார்.

5 ஜிகா வோட் நீர் மின்சாரம் மூலம் 2,500 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதில்லை எனவும், மின்வெட்டு அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் கோரிக்கைகளை மாத்திரமே ஆணைக்குழு அங்கிகரிப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆணைக்குழுவால் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது என்ற எண்ணத்தில் சில பிரிவினர் இருப்பதாகவும் ஆணைக்குழு தீர்மானங்களை எடுத்தாலும் மின்சார சபை வழங்கிய காரணிகள் மற்றும் தரவுகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுவதாக தெரிவித்தார்.
 
ரத்நாயக்க, மின்சார உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நீர் பற்றாக்குறையே மின்வெட்டுகளை அமுல்படுத்துவதற்கான கோரிக்கைகளின் பின்னணியில் உள்ள காரணங்களாக மின்சாரசபை மேற்கோள் காட்டியுள்ளதாகவும் அதற்கிணங்கவே தாம் அனுமதி வழங்குவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .