2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினார்

Freelancer   / 2024 நவம்பர் 01 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
 
வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் யசோதினி கருணாநிதி முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்
 
வன்னி தேர்தல் மாவட்டத்தில்  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில்  பெண் வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் போராளியான யசோதினி கருணாநிதி, முல்லைத்தீவில்  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தி தனது தேர்தல் பரப்புரைகளை முன்னெடுத்தார்
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையை முன்னெடுக்க வந்த நிலையில்  முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து முல்லைத்தீவு  மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் போராளியான யசோதினி கருணாநிதி, “மக்கள் மத்தியில் அன்று மக்களுக்காக போராடிய நான் இன்றும் மக்களுக்காக ஜனநாயக வழியில் பெண்ணாக போராட வந்துள்ளேன் எனவே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னதுக்கும்   இலக்கம் அறுக்கும் வாக்களித்து  என்னை பாராளுமன்றம் அனுப்புங்கள் நான் தொடர்ந்து எமது மக்களின் உரிமைகளுக்காக போராடுவேன்” என தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .