2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மூளையில் கிருமித் தொற்று; குடும்பஸ்தர் உயிரிழப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 24 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடவத்தை, துன்னாலைப் பகுதியில் நேற்று (23) இடம்பெற்றுள்ளது.

 இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த மணியம் ஜெகதீஸ்வரன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்

குறித்த குடும்பஸ்தர் திடீர் உடல்நல குறைவு காரணமாக நேற்று புதன்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை கொண்டு சென்ற போது அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

பிரதேச பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .