Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மார்ச் 21 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான 13 யோசனைகள் அடங்கிய கடிதம் ஒன்றை மல்வத்து பீட மஹாநாயக்கர் திப்பட்டுவாவே சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீட மஹாநாயக்கர் வரகாகொட ஞானரதன தேரர் ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேசிய கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியத்தை மகாநாயக்க தேரர்கள் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்நியச் செலாவணி நெருக்கடியைத் தணிக்க அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைகளின் பட்டியலின்படி, அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார மாதிரியை உருவாக்குதலும் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உற்பத்திக்கு, விவசாயத்திற்கு மற்றும் விவசாய மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், பொருளாதார நெருக்கடிக் காலத்தில் முறையற்ற நிதியீட்டல்களுக்காக அத்தியாவசியமான பொருட்களில் செயற்கையாகப் பற்றாக்குறையை உருவாக்கும் மோசடி வியாபாரிகளுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முதலீட்டை ஊக்குவிக்கவும், வெளிப்படையான பொருளாதாரத் திட்டத்தின் மூலம் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தை அதிகரிக்கவும், ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் கடிதத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
நாட்டில் புதிய முதலீடுகளை ஊக்குவித்தல், அரசக் கடனை மறுசீரமைத்தல், குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரணம் வழங்குதல், வீண்விரயம், ஊழல் மற்றும் வள துஷ்பிரயோகம் ஆகியவற்றைத் தடுக்க நிலையான திட்டத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்காக நடைமுறைப்படுத்திய தூரநோக்குடைய வேலைத்திட்டங்கள் தொடர்பில் முழு நாட்டு மக்களினதும் பாராட்டு மற்றும் மகிழ்ச்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் என்று மகாநாயக்க தேரர்கள் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கட்சி பேதமின்றி நாட்டைப் பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பூரண பங்களிப்பும் அர்ப்பணிப்பும் அவசியம் என்று தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
57 minute ago
1 hours ago