2025 ஜனவரி 10, வெள்ளிக்கிழமை

மேல்மாகாண அரசியல்வாதிகள் சுயேட்சையாக போட்டியிட தீர்மானம்

Freelancer   / 2025 ஜனவரி 10 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல்மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதிகள் குழுவொன்று, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாக போட்டியிட தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலங்களில் பல அரசியல் கட்சிகளின் கீழ் போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவே சுயேட்சைக் குழுவாக தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. 

இந்த குழுவில், முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.

அண்மையில், இக்குழுவினர் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாகவும் அதில், அரசியல் கட்சிகளில் இருந்து போட்டியிடாமல் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்கு வி்சேடமாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X