2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

மேலும் 2 பரீட்சைகள் பிற்போடப்பட்டன

Simrith   / 2024 நவம்பர் 28 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு அரச பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டக் கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை மற்றும் சனத்தொகை மற்றும் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட புள்ளிவிபரவியலாளர்களுக்கான முதலாவது வினைத்திறன் பரீட்சை – 2016 (2024) ஆகியவை பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமித் ஜயசுந்தர, முதலில் பரீட்சைகள் டிசம்பர் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், நாட்டின் பல பாகங்களில் இருந்து பரீட்சார்த்திகள் பரீட்சைகளுக்காக கொழும்புக்கு சமூகமளிக்கவிருப்பதாகவும் கூறினார். 

எவ்வாறாயினும், சீரற்ற காலநிலையினால் பல்வேறு பிரதேசங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையினால், இரண்டு பரீட்சைகளையும் ஒத்திவைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பரீட்சைகளின் மீள் திட்டமிடப்பட்ட திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X