Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2024 பெப்ரவரி 15 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தூர பிரதேசங்களில் இருந்து கொழும்புக்கு வருகைதருவோர், தங்களுடைய வேலைகளை முடித்துக்கொண்டு, பொது போக்குவரத்தின் ஊடாக தங்களுடைய வீடுகளுக்குச் திரும்புவதற்கு முன்னர், அவசர தேவைகளுக்காக பொது மலசலக்கூடத்தையே பயன்படுத்துவர்.
புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பொது மலசலக்கூடத்தை பயன்படுத்துவோரிடம், அறவிடப்படும் கட்டணம் திடீரென 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இலங்கை ரயில் திணைக்களத்துக்கு உரித்துடைய காணியில், இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக, பொது மலசலக்கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மேற்படி விவகாரம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஷெரினிடம் வினவியபோது,
“இந்த பொது மலசலக்கூட தொகுதி, எங்களுடைய ஆணைக்குழுவுக்கு உரித்துடையது என்றாலும், வெளியாருடன் செய்துககொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாரமரிப்பதற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் பொதுமக்களால் அவ்வப்போது முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாங்கள் விசாரணைகளை முன்னெடுத்து, நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். எனினும், தற்போது கட்டணம் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் அறிந்திருக்கவில்லை. இது தொடர்பில் தேடியறிந்து நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago