2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

மேல், தென் மாகாண வீதிகள் முடக்கம்

Freelancer   / 2024 ஒக்டோபர் 12 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மற்றும் தென் மாகாணங்களில், வெள்ளம் காரணமாக பல வீதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதில் களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவான வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பண்டாரகம - கொலமதிரிய, பாலிந்தநுவர - பதுரலிய, பரல்லாவிட்ட - அவிட்டாவ, களுத்துறை - மத்துகம, புலத்சிங்கள - மொல்கா ஆகிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மேலும் மினுவாங்கொடை, கட்டான, ஹன்வெல்ல, கடுவெல, கொலன்னாவ, பன்னல, ஹோமாகம உள்ளிட்ட பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.(AN)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .