2024 ஒக்டோபர் 23, புதன்கிழமை

’மாற்றுக் கருத்துகளுடனே நாங்கள் பயணிக்கின்றோம்’

Freelancer   / 2024 ஒக்டோபர் 23 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாங்கள் நடைமுறைக்கு சாத்தியப்படும் பல வகையான மாற்றுக் கருத்துகளுடனே தான் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வந்திருக்கின்றோம் என நுவரெலியா மாவட்டத்தில்  சுயேட்சை குழுவில் போட்டியிடும் சாமிமலை ரூபன் எனப்படும் விமலாசாந்தன் தனரூபன் தெரிவித்தார். 

   நுவரெலியா மாவட்டத்தை மாற்றி காட்டுவதற்கு நாங்கள் முன் வந்திருக்கின்றோம் என்றார்.  

“அறிஞர் பெருமக்களின் கூற்றுப்படி மாற்றத்தினை எல்லோரும் விரும்பினாலும், மாற்றத்தை ஏற்படுத்த யாராவது முன்வர வேண்டும், அந்த அடிப்படையில் நாங்கள் அந்த மாற்றத்தினை ஏற்படுத்த முன்வந்துள்ளோம்” என்றார்.

 நுவரெலியா மாவட்டத்தினை பொறுத்த மட்டில் பல வகையான பிரச்சனைகள் இருக்கின்றன, உதாரணமாக தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை மாத்திரமல்லாமல், EPF மற்றும் ETF   போன்றவை பெறுவதில் உள்ள சிக்கல்கள் அத்துடன் மலையக வீதிகள் புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றமை இளைஞர் யுவதிகள் வேலையில்லா பிரச்சனைகள் என பல பிரச்சனைகள் இருக்கின்றன. 

ஆகவே,   நாங்கள் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் இப்பிரச்சினைகளை  நாங்கள் தீர்ப்போம்.   நுவரெலியா மாவட்டத்தில் பல அரசியல் கட்சிகள் இருந்தாலும் நீங்கள் சுயாதீனமாக போட்டியிடுவதற்கான காரணம் என்ன என்று ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது...

  கடந்த 30 - 40 வருட காலமாக மலையகத்தைப் பொறுத்தளவில் எந்த அளவான விடயங்கள் நடைபெற்று இருக்கின்றது. எந்த விதமான வேலைகள் செய்திருக்கின்றார்கள்?  10 சதவீதமான வேலைகள் மாத்திரமே முடிவடைந்திருக்கின்றது.  ஆகவே 100 சதவீதமான வேலைகளையும் செய்து முடிப்பதே எங்களுடைய எண்ணமாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .