2025 மார்ச் 15, சனிக்கிழமை

மருத்துவர் வன்கொடுமை மேலும் ஒருவர் கைது

Freelancer   / 2025 மார்ச் 13 , மு.ப. 08:56 - 0     - 102

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் 37 வயதுடைய சகோதரி மற்றும் 27 வயதுடைய ஆண் நபரும் நேற்று (12) இரவு கல்னேவ நிதிகும்பயாய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

அனுராதபுரம் மருத்துவமனை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய காரணத்திற்காக குறித்த பெண் கைது செய்யப்பட்டார் . 

அதே நேரத்தில் சந்தேகநபரால் திருடப்பட்டதாகக் கூறப்படும் மொபைல் போன் மற்ற நபரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .