2025 ஜனவரி 05, ஞாயிற்றுக்கிழமை

மர்மமான ஆளில்லா விமானம் ; இறுதி அறிக்கை வெளியானது

Freelancer   / 2025 ஜனவரி 02 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையை அண்மித்த கடலில் கண்டெடுக்கப்பட்ட ஆளில்லா விமானம், இலங்கைக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் இறுதி அறிக்கை விமானப்படை தளபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆளில்லா விமானம் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது.

இது பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.

கடந்த 27ஆம் திகதி திருகோணமலைக்கு அருகில் உள்ள கடலில் இந்த ஆளில்லா விமானத்தை மீனவர்கள் குழு கண்டுபிடித்தது.

ஏறக்குறைய இரண்டு வாரங்களாக இந்த ஆளில்லா விமானம் கடலில் இருந்ததாகவும், அதனை மீண்டும் தொடர்புடைய நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X