Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 22, புதன்கிழமை
Simrith / 2025 ஜனவரி 21 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை பப்பாவெரின் ஊசி மருந்தை அதிக விலைக்கு வழங்கிய நிறுவனத்துடன் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ள சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என இன்று தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் 76,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு மருந்தின் விலை தற்போது ரூ. 359க்கு கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்திய அமைச்சர், இது ஏகபோக நடைமுறைகள் மற்றும் "மருந்து மாபியாவின்" செல்வாக்கின் விளைவு என்று கூறினார்.
ஏகபோக நடைமுறைகளின் விளைவாக, குறிப்பிட்ட மருந்தை இறக்குமதி செய்ய பொதுவாக ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர சந்திப்பில் அமைச்சர் விளக்கினார்.
"ஒன்று , மற்ற நிறுவனங்கள் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது, அல்லது, பல நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், மருந்து ஒரே ஒரு நிறுவனத்தால் மட்டும் திறம்பட இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது," என்று அவர் கூறினார்.
இந்த மருந்து இறக்குமதி செய்யப்படும் போது விலை சூத்திரம் இல்லை என்றும், நிறுவனங்கள் நிர்ணயித்த விலைக்கே மருந்துகளை அரசு கொள்முதல் செய்ததாகவும் சுகாதார அமைச்சர் கூறினார்.
இந்த மருந்தை அரசு ரூ. 58,000, 62,000, 64,000 மற்றும் 76,000 எனப் பல்வேறு விலைகளில் கொள்வனவு செய்துள்ளதுடன் அரசாங்கம் 2019 முதல் 2023 வரை இந்த மருந்தை இறக்குமதி செய்ய 342.49 மில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் ஒழுங்குமுறை மாற்றங்களின் பின்னர் இப் பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
NMRA இன் விலை நிர்ணயக் குழு இப்போது மருந்துப் பதிவைப் புதுப்பிப்பதற்கு முன் பிராந்திய விலைகளை மதிப்பாய்வு செய்கிறது, இது 2018 இல் மருந்து முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட முறைமைத் தேவைப்பாடாகும்.
சம்பந்தப்பட்ட நிறுவனம் அரசியல் ரீதியாக தொடர்புடையது என்றும், முந்தைய முறையின் கீழ் அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் சுகாதார அமைச்சர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
6 hours ago
8 hours ago
21 Jan 2025