2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மனைவியுடன் நடனமாடிய இளைஞன் படுகொலை

Editorial   / 2024 ஜூன் 16 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இசை நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடங்கொட, ஜன் உதான கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மெனுர நிம்தர வணிகசேகர என்ற இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் உள்ளூர் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் சில நாட்களுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

களுத்துறை, கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த குறித்த யுவதி, தான் பணிபுரிந்த ஆடை தொழிற்சாலையில் இளைஞர் ஒருவருடன் நடனமாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு உயிரிழந்த சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞனின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .