2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

’மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு அசமந்த போக்கு’

Freelancer   / 2025 ஏப்ரல் 08 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் தமது இலங்கை விஜயத்தின் போது மீனவர் பிரச்சினை தொடர்பில் விரிவாக ஆராயவில்லை எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
தமிழக சட்டமன்றில் அவர் நேற்று கருத்து தெரிவிக்கையில்,

பிரதமர் இலங்கை சென்றிருந்தார். அப்போது மீனவர் விடுதலை மற்றும் கச்சதீவு குறித்து பெரிய அளவிலான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும், சிறையில் வாடும் 97 மீனவர்களும், சிறைபிடிக்கப்பட்ட படகுகளும் மீட்கப்பட்டு தாயகம் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாதது நமக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்படுவது கடந்த சில மாதங்களாக நம் அனைவரையும் கவலைக்கு உள்ளாக்கி வரக்கூடிய செய்தியாகும். மத்திய அரசும், இந்தியப் பிரதமரும் நமது கோரிக்கைகளைப் புறக்கணிக்கின்றார்கள் என்றே கருத வேண்டியுள்ளது. மத்திய அரசு எப்படி நடந்து கொண்டாலும், நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நாம் தவறமாட்டோம் என்றார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X