2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

முன்னாள் ஜனாதிபதிகளிடம் இருந்து முப்படையினர் நீக்கம்

Janu   / 2024 டிசெம்பர் 23 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முப்படை வீரர்களை திங்கட்கிழமை (23) முதல் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் முப்படைத் தளபதிகளுக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் மாத்திரம் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடுவார்கள் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் போதுமான அளவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் 6 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்பட்டுப் பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X