2025 ஜனவரி 15, புதன்கிழமை

மின்சாரம் துண்டிப்பு: தடுப்பூசிகள் பாதிக்கும் அபாயம்

Editorial   / 2025 ஜனவரி 15 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மின்சாரம் புதன்கிழமை (15) துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு குளிரூட்டியில் பாதுகாப்பாக  வைக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட முடியாத நிலை ஏற்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வவுனியா சுகாதார வைத்திய  அதிகாரி பணிமனையின் மின்சார கட்டணம் செலுத்தப்படாத நிலையில் மின்சார சபை ஊழியர்களால் அந்த  அலுவலகத்துக்கான மின்  இணைப்பு புதன்கிழமை (15) துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக அங்கு மின்சாரம் தடைப்பட்டது. மின் பிறப்பாக்கி மூலம் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏதுவான சூழல் காணப்படவில்லை.   இந்நிலையில் அங்கு கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சிறுவர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த ஊசிகள் சில குளிரூட்டியில் வைக்க வேண்டிய நிலைமை காணப்பட்ட போதிலும் மின் துண்டிக்கப்பட்டமையினால் அவை பழுதடைந்து விடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 எனவே, இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து குறித்த தடுப்பூசிகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X