2025 மார்ச் 12, புதன்கிழமை

மின்சாரம் தாக்கி சிறுமி பலி

Freelancer   / 2025 பெப்ரவரி 08 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை 6 வயது சிறுமி ஒருவர் கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார். அவர் தவறுதலாக கீழே வீழ்ந்தபோது நீர் இறைக்கும்  இயந்திரத்துக்குச் சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வீட்டார் குறித்த சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வந்த போதும் சிறுமி வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் புளியங்குளம், பழையவாடி பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய ந.மதுசாளினி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .