2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

மின்சாரக் கட்டணம் திருத்தப்படுமா?

Freelancer   / 2024 டிசெம்பர் 23 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவது தொடர்பான வாய்மூல அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த அமர்வுகளில்  கட்டண திருத்தம் தொடர்பாக மின்சார சபை சமர்ப்பித்த முன்மொழிவு மற்றும் பொது பயன்பாட்டு ஆணைக்குழு சமர்ப்பித்த  பதில் முன்மொழிவு குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்படவுள்ளன.

இலங்கை மின்சார சபை, அடுத்த 6 மாதங்களுக்கு கட்டண திருத்தம் செய்யப்படக்கூடாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகளை அண்மையில் சமர்ப்பித்திருந்தது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பதில் பிரேரணைகளை முன்வைக்கும் போது, ​​மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

இந்த முன்மொழிவுகள் தொடர்பில் எழுத்துமூலம் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை கடந்த 17ஆம் திகதி ஆரம்பமானதுடன், வாய்மூல அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி கண்டி பிரதேசத்தில் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X