2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மத்திய வங்கியின் அதிரடி அறிவிப்பு

Freelancer   / 2022 மார்ச் 19 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பணம் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான உத்தேச மேலதிக ஊக்குவிப்புத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நாணய மாற்று விகிதத்தில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் தீர்மானத்தின் விளைவாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நாணய மாற்று விகிதமானது வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்களின் அந்நியச் செலாவணிக்கு அதிக வருமானத்தையும், ஏற்றுமதியாளர்களின் நிகர வருவாயில் அதிக ரூபாய் மதிப்பையும் வழங்குகிறது என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .