Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 06 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிகோரி வீதிக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (05) நள்ளிரவு 12.00 மணியளவில் காரை நிறுத்தி மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படும் இரு பெண்களால் தாக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்கள் இருவரும் அதிக போதை காரணமாக பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கியுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொழும்பு 13 மற்றும் கொழும்பு 14 ஆகிய இடங்களில் வசிக்கும் 30 மற்றும் 43 வயதுடைய இரண்டு பெண்களே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகர போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் இந்த பொலிஸ் கான்ஸ்டபிள், மேலும் பல பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago
20 minute ago
38 minute ago