2025 பெப்ரவரி 12, புதன்கிழமை

மதுபானம் தயாரித்த சீனப் பிரஜை சிக்கினார்

Freelancer   / 2025 பெப்ரவரி 12 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லம்பிட்டிய, பிராண்டியாவத்த பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த சீனப் பிரஜை ஒருவர் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸாரும் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளும் இணைந்து நடத்திய சோதனையில் இவா கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த சீன நாட்டவரிடமிருந்து 318,000 மில்லி லீட்டர் கோடா மற்றும் 67,500 மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபரான சீன நாட்டவர் தாமரை கோபுர திட்டத்தில் பொறியாளராகப் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட சீன நாட்டவர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X