2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மண்சரிவில் சிக்கிய 30 பேர் மீட்பு

Freelancer   / 2024 செப்டெம்பர் 16 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கித் தவித்த 30 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
 
மேற்படி 30 பேரும் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு பயணம் மேற்கொண்ட போது தவாகாட்-தானாக்பூர் நெடுஞ்சாலைக்கு அருகில் வைத்துத் திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
 
இதனால் அவர்கள் மலைப்பகுதியிலிருந்து கீழே வரமுடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
இதனையடுத்து மண்சரிவினால் சிக்கித் தவித்த 30 பேரும் உலங்கு வானூர்தி மூலம் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டனர் என  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X