2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 5 பேர் பலி

Freelancer   / 2024 செப்டெம்பர் 08 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று நடந்த புதிய வன்முறையில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு மே 3 ஆம் திகதி குகி ஸோ பழங்குடியினர் மற்றும் மைத்தேயி சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட இனக்கலவரம் ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது.

இந்த மோதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. போராட்டாக்காரர்கள் இந்த முறை ட்ரோன்கள், ரொக்கெட்கள் போன்ற நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதனால், மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற புதிய வன்முறையில் 5 பேர் உயிரிழந்தனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X