2025 மார்ச் 06, வியாழக்கிழமை

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

Freelancer   / 2025 மார்ச் 05 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழர்ந்துள்ளார்.

 இவ்வாறு உயிரிழந்தவர் வி .எச். ஒழுங்கை, கோப்பாய் தெற்கு, கோப்பாயைச் சேர்ந்த சாம்பசிவம் தங்கம்மா (வயது 79) என்பவர் ஆவார்.

குறித்த வயோதிப பெண் கடந்த மாதம் 17ஆம் திகதி கோப்பாய் அஞ்சல் அலுவலகத்தில் உதவித்தொகையை பெற்றுக்கொண்டு வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியால் வந்த பெண் ஒருவர் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்ற போது அவர் இருபாலை முனிகோவில் வீதியில் தவறி விழுந்துள்ளார். 

உடனடியாக  கோப்பாய் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (03) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .