Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 13, வியாழக்கிழமை
Editorial / 2025 மார்ச் 13 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.கே.பி கபில
இந்தியாவின் சென்னையில் தலைமறைவாக இருந்து, ஹெரோய்ன், கொலை மற்றும் பல பிற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பாலச்சந்திரன் கஜேந்திரன், இலங்கைக்கு வருகை தந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டார்.
கொழும்பு-மட்டக்குளியவில் வசிக்கும் பாலச்சந்திரன் கஜேந்திரன், (வயது 36), போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இந்தியாவின் சென்னையில் உள்ள சிறையில் இருக்கும் புகுடுகண்ணா என்றும் அழைக்கப்படும் பாலச்சந்திரன் கண்ணாவின் தம்பி ஆவார்,
பாலச்சந்திரன் கஜேந்திரன் 2023 முதல் இந்தியாவின் சென்னையில் உள்ளார். கொழும்பு குற்றப்பிரிவு, மாளிகாவத்தை, மோதரை மற்றும் கடலோர காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் பல வழக்குகளில் தேடப்படும் நபராக உள்ளார்.
அவர் கண்டியைச் சேர்ந்த சுரேந்திரன் அருணகிரி என்ற பெயரில் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி, வியாழக்கிழமை (13) அதிகாலை 2:00 மணிக்கு இந்தியாவின் சென்னையில் இருந்து இண்டிகோ விமானத்தில் ஏறினார். விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டார்.
அதன்பின்னர், , கொழும்பு குற்றப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பிற்பகல் 01.30 மணியளவில் வந்து, மேலதிக விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago