2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

மோடி வரும் போது நாய்களை அகற்ற வேண்டாம் என கோரிக்கை

Freelancer   / 2025 ஏப்ரல் 03 , பி.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு தெரு நாய்களை அகற்ற வேண்டாம் என இந்திய விலங்குகள் நல வாரியத்தின் முன்னாள் துணைத் தலைவர் இன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் இன்று ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டது.

இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது கொழும்பு நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தெரு நாய்களை அகற்றும் இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் முன் பல விலங்கு ஆர்வலர்கள் கலந்து கொண்டு, போராட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X