Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2024 ஜனவரி 31 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
விகாரையொன்றின் தலைமை பிக்கு ஒருவர், காவியுடை களைந்து, சிவில் உடையணிந்து அழகான இளம் பெண்கள் மூவருடன் சுற்றுலா சென்றுள்ள சம்பவமொன்று தென்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அவ்வாறு சாதாரண உடையில் இளம் பெண்கள் மூவருடன் வந்து சுற்றித்திரியும் நபர், தங்களுடைய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் பிரதான பிக்கு என்பதை, அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கண்டுக்கொண்டதை அடுத்து, கடந்த திங்கட்கிழமை (29) விகாரைக்குத் திரும்பிய அந்த பிக்கு, விகாரையை விட்டு வெளியேறி தலைமறைவாகிவிட்டார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம், அளுத்கம,வெலிப்பென்ன தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு உள்நுழையும் வீதிக்கு அண்மையில் உள்ள கிராமமொன்றின் விகாரையிலேயே இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்த பிக்கு, சிவில் உடையில் கதிர்காமத்துக்கு மூன்று இளம் பெண்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரும் கதிர்காமத்துக்கு ஏற்கெனவே சுற்றுலா சென்றிருந்தனர்.
ஆணொருவருடன் மூன்று பெண்கள் கைகளை கோர்த்துக்கொண்டு பயணித்தால், யாருக்குத்தான் சந்தேகம் வராது, அங்குச் சென்றிருந்தவர்கள் பலரும் அந்த நால்வரையும் உற்றுப்பார்த்துள்ளனர்.
அதேபோல, வெலிப்பென்ன பிரதேசத்தில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் அவதானித்துள்ளனர். அப்போதுதான், சிவில் உடையில் இருக்கும் நபர், தங்களுடைய கிராமத்தை சேர்ந்த விகாரையின் பிக்கு என்பதை கண்டறிந்தனர்.
இதனையடுத்து, தங்கள் வசமிந்த அலைபேசிகள் ஊடாக படம் எடுத்துக்கொண்டனர். அதுமட்டுமன்றி வீடியோவாகவும் பதிவு செய்து, முகப்புத்தகம் (பேஸ் புக்), சமூக வலைத்தளங்களில் தரவேற்றம் செய்தனர். இந்த படங்கள் காட்டுத்தீயாய் பரவியது.
அத்துடன், அங்கிருந்த இளைஞர்கள் அந்த நால்வரையும் கடுமையாக எச்சரித்தனர். அதனையடுத்து தப்பினோம் பிழைத்தோமென அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.
யுவதிகள் மூவரும் எங்குச் சென்றுவிட்டனர் என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், விகாரைக்கு விரைந்த பிக்கு, அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கதிர்காமம் சுற்றுலாவை முடித்துக்கொண்டு கிராமத்துக்கு வருமுன்னர், விகாரையில் இருந்து திங்கட்கிழமை (29) இரவே தலைமறைவாகிவிட்டார் என வெலிப்பென்ன பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காமத்தில் நால்வரும் கைகளைக் கோர்த்துக்கொண்டு பயணித்துள்ளனர் என்பதுடன், சிவில் உடையில் இருந்த தேரர், தனது கையில் மஞ்சள் நிறத்திலான குடையை வைத்திருந்தமையால் மாட்டிக்கொண்டார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
7 hours ago