Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 03, திங்கட்கிழமை
Editorial / 2025 பெப்ரவரி 03 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மன்னா கத்திகள்' மற்றும் 'அரிவாள்'களுடன் ஆயுதம் ஏந்திய நான்கு நபர்கள் இரவில் ஒரு மசாஜ் பார்லருக்குள் நுழைந்து, மேலாளரின் கழுத்தில் மன்னா கத்தியை வைத்து மிரட்டி, நிறுவனத்தின் டிராயரில் இருந்து, நான்கு பெண்களிடமிருந்தும் கிட்டத்தட்ட 10 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது. தப்பிச் சென்றவர்கள் தொடர்பான விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மெதவாச்சியா, அதக்கட, அதவீர கொல்லாவ என்ற முகவரியில் வசிக்கும் ஒருவர், அங்கு காசாளராக பணிபுரிந்து வந்த புகாரைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம், தஹையகம சந்தியிலிருந்து புபுதுபுர சாலையில் அமைந்துள்ள இந்த மசாஜ் மையத்திற்குள் கத்திகள் மற்றும் அரிவாள்களுடன் ஆயுதம் ஏந்திய நான்கு நபர்கள் நுழைந்து இந்தக் கொள்ளையை செய்துள்ளனர்.
மசாஜ் பார்லருக்குள் நுழைந்த நான்கு கொள்ளையர்கள் ரூ.577,000 பணம் ரூ.350,000 மதிப்புள்ள இரண்டு தங்க நெக்லஸ்கள், காசாளரின் டிராயரில் இருந்து ஒரு தங்க பவுண் மற்றும் ஒரு தங்க மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago