Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2024 செப்டெம்பர் 24 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமது 15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய உதவியதாக பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் எதிராக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கெபித்திகொல்லாவ மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் கசுன் காஞ்சன தசநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு செப்டம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.32 வயதான சந்தேக நபர் பதவிய பிரதேசத்தை சேர்ந்தவர்.
சந்தேகநபர் சிறுமியை கற்பழிக்க பெற்றோர் அனுமதித்ததாகவும், அவள் கர்ப்பத்தை மறைத்ததாகவும், அவள் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தபோது பாடசாலைக்கு சென்றதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
வஹல்கட பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு பிரதேசவாசிகளிடம் கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
குற்றத்திற்கு உதவிய மற்றும் மறைத்த குற்றத்திற்காக பொலிஸ் உத்தியோகத்தரான சிறுமியின் தந்தை, மற்றும் அவரது தாயாரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சந்தேக நபரை ஆஜர்படுத்திய வாஹல்கட பொலிஸ் பிரிவின் சார்ஜன்ட் திஸாநாயக்க நீதிமன்றில் தெரிவித்தார்.
சிறுமியை பரிசோதித்த ஜே.எம்.ஓ., சிறுமி ஆறு மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்ததாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago