Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 24, திங்கட்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். வடமராட்சி கிழக்கில் மகன் தாக்கியதில் படுகாயமடைந்த நேற்று (23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் கடந்த 19 ஆம் திகதி மாலை நால்வர் மீது வவுனியாவில் இருந்து வந்தவர்களால் மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது.
குடும்பத்தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும், சகோதரனின் மனைவி மீதும் வவுனியா பகுதியில் இருந்து வாகனம் ஒன்றில் ஆட்களை அழைத்து வந்து வீட்டுக்குள் புகுந்து கம்பி, கற்களால் தாக்குதல் நடத்தியிருந்தார்.
அடிகாயங்களுக்குள்ளான நால்வரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
பலத்த காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தந்தை நேற்று (23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, தாக்குதல் நடத்திய வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் உள்ளிட்ட மூவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
32 minute ago
34 minute ago
35 minute ago