2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மகாநாயக்கர்களை சந்தித்தார் ஜனாதிபதி அனுர

Editorial   / 2025 ஏப்ரல் 25 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை, வௌ்ளிக்கிழமை (25) சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.

முதலில் மல்வத்து மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி,  மல்வத்து மகாநாயக்க வண, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரைச் சந்தித்து, "ஸ்ரீ தலதா வழிபாடு" மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.

பின்னர், அஸ்கிரி மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க  வண, வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்து, சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அஸ்கிரி பீடத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக கடமையாற்றும் வண,உருளேவத்த தம்மரக்கித நாயக்க தேரரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதுடன், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .