Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 25, செவ்வாய்க்கிழமை
Simrith / 2025 பெப்ரவரி 25 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் கடத்தல்காரன் 'மாகந்துரே மதுஷ்' இன் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொண்டதாகக் கூறும் படத்தைப் பகிர்ந்த முகப்புத்தக கணக்கு குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்க தகவல் திணைக்களம், பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தரங்க லக்மால் என்ற நபரால் இந்தப் படம் பேஸ்புக்கில் பரப்பப்பட்டதாக அரசாங்கத தகவல் திணைக்களம் பதில் பொலிஸ்மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
அந்த நபர் தவறான தகவல்களைப் பகிர்ந்துள்ளதால், சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
46 minute ago
2 hours ago