2025 ஜனவரி 08, புதன்கிழமை

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இ-சேவை

Mayu   / 2025 ஜனவரி 07 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி புலம்பெயர்ந்தவர்கள் தாம் வாழு் நாடுகளில் உள்ள  ஸ்ரீ லங்கா தூதரகங்களில் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி பெற்றுக்கொள்ள முடியும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கு அமைய இந்த திட்டம் திங்கட்கிழமை (06) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்படி, 07 தூதரகங்களுக்கு இந்த முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், ஜப்பான், கட்டார், குவைத் தூதரகங்கள், மிலானோ, டொறொன்டோ, மெல்பேர்ன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளின் துணைத் தூதரகங்கள் ஊடாக அந்த நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மேற்படி ஆவணங்களை தாமதமின்றி பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் அனைத்து தூதரகங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X