2025 பெப்ரவரி 20, வியாழக்கிழமை

மக்களை அச்சுறுத்துவதற்கு எதிராக நாமல் குரல்

Freelancer   / 2025 பெப்ரவரி 17 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று கவலை வெளியிட்டார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாமல், மாத்தளையைச் சேர்ந்த ஒருவரை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருவதாக தெரிவித்தார்.

அக்குரெஸ்ஸ மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸவிலும் இதேபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அரசாங்க பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் நபர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் மக்களை அச்சுறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறினார்.

மக்களை ஒடுக்குவதையும் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதையும் அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என்றும், வலியுறுத்தினார்.R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X