2025 மார்ச் 25, செவ்வாய்க்கிழமை

மு.கா ஆதரவாளர்கள் சிலர், தே.ம.சவுடன் இணைந்தனர்

Editorial   / 2025 மார்ச் 23 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜவ்பர்கான்   

மண்முனை பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் மண்முனை பற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளருமான ஏ.ஏ.மதீன் தலைமையிலான ஆதரவாளர்கள் முக்கிய செயற்பாட்டாளர்கள் தேசிய மக்கள் சக்தியோடு  சனிக்கிழமை (22) இணைந்து  கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மண்முனை பற்று அமைப்பாளர் மதீன் தலைமையில் காங்கேயனோடை கிராம அபிவிருத்தி அமைப்பு சங்க மண்டபத்தில் மேற்படி வைபவம் இடம்பெற்றது. 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மண்முனை பற்றில் அரசாங்கத்தை பலப்படுத்தி உள்ளூராட்சி மன்ற அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த இணைவு நடைபெற்றது. 

மேற்படி வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் எம்.  அப்துல்லா . கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்   யூ எல் எம் என் முபீன். தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட குழு உறுப்பினர் எஸ் எம் ஏ. நசீர்.  காத்தான்குடி நகர சபை தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களான  பொறியியலாளர் பலுலுல் ஹக்.  எம். நஜிம் மற்றும்  எம்‌ எம். றம்ஸி உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர். 

மண்முனை பற்று பிரதேசம் சார்ந்து எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய பல்வேறு வேலை திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது இங்கு முக்கிய அம்சமாகும்‌.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X