2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

போதைப்பொருள் விநியோகித்த தபால்காரர் கைது

Editorial   / 2024 டிசெம்பர் 04 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

20 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருள் தொகையுடன் கொட்டாஞ்சேனை தபால் அலுவலகத்தின் கடித விநியோகஸ்தர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரிடம் 110 கிராம் போதைப்பொருள் இருந்து மீட்கப்பட்டது.

ஒரு தபால் அலுவலகத்தில் கடிதம் விநியோகிப்பவர், சீருடையுடன் சுற்றித்திரிந்து போதைப்பொருளை விநியோகிப்பதாகவும், ​பொரளை வனாத்தமுல்லை பகுதியில் அவர் சுற்றிதிரிவதாகவும் கிடைத்த தகவலுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டார்.

விசேட பொலிஸ் குழுவினால் சந்தேக நபரை கைது செய்ததுடன், சோதனையின் போது, ​​கடிதப் பையில் கடிதங்களுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  போதைப்பொருள்   கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் கொட்டாஞ்சேனை வீட்டில் விசேட சோதனைகளை மேற்கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை (03) இரவு விசேட பொலிஸ் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 32 வயதுடையவர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .