2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

போதைப்பொருள் வர்த்தகரின், நான்கரை கோடி ரூபாய் கணக்கு முடக்கம்

Editorial   / 2023 ஜூன் 29 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் வியாபாரி மற்றும் டுபாயில் மறைந்திருந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் தலைமையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 33 வயதுடைய இலங்கைப் பெண்ணின் நான்கரை கோடி ரூபாய் வைப்பிலிடப்பட்டிருந்த வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதே போன்று குறித்த பெண் கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரிடம் இருந்த 18 இலட்சத்து 75,000 ரூபாய் பணத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி அங்குலான பொலிஸ் அதிகாரிகள் 5000 மில்லிகிராம் போதைப்பொருள் மற்றும் 18 இலட்சத்து 75,000 ரூபாய“ பணத்துடன் அப்பெண்ணை கைதுசெய்தனர்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக அங்குலான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் எழுத்துமூல முறைப்பாடு செய்யப்பட்டது. சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர், பொலிஸார் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில்   அறிவித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .