2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

போதை அதிகமானதால் இளைஞர் மரணம்

Freelancer   / 2025 மார்ச் 26 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் அளவுக்கதிகமான ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உடலில் செலுத்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ். நல்லூர் பகுதியைச் சேர்ந்த ஜெயகுபேன் சுகன்யன் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். .

கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர் ஒருவரின் வீட்டில் படுத்திருந்த மேற்படி இளைஞர், மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

அவர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.   

பிரத பரிசோதனையில் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளை  ஊசி மூலம் உடலில் ஏற்றியதால் மரணம் சம்பவித்துள்ளது என்று  அறிக்கையிடப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X