Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Janu / 2025 மார்ச் 18 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களை கைது செய்து ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிட்டால், மேலும் பிடியாணைகளைப் பிறப்பிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ். எஸ் சபுவித சுட்டிக்காட்டியதோடு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என்ற சட்டமா அதிபரின் கோரிக்கையை திங்கட்கிழமை (17) அன்று நிராகரித்தார்.
சாட்சியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது அரசுத் தரப்பு பொறுப்பு என்பதை வலியுறுத்திய மேல் நீதிமன்ற நீதிபதி, நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாவிட்டால் இந்த நாடு எங்கே போகும் என்று கேள்வி எழுப்பினார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துவுடன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் பிடியாணை பெற்றிருந்த மதுரங்க என்ற பொலிஸ் சாட்சிக்கு இவ்வாறு பிடியாணை நிராகரிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago