Editorial / 2024 டிசெம்பர் 08 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், கோப்பாய், அச்சுவேலி, சுன்னாகம் உள்ளிட்ட பல பிரதேசங்களில், மக்களை அச்சுறுத்தி, இரவு நேரங்களில் வீடுகளுக்கு புகுந்து, பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்ற சந்தேக நபர், வத்தளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண பொலிஸார், அவரை வத்தளையில் கைது செய்ய முயன்றபோது, அவர், கைக்குண்டை வீசி தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட போது, யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரியின் வயிற்றை கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளார். காயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடவத்த, கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் வயது 38 வயதானவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரால் கொள்ளையடிக்கப்பட்ட 50 கிலோ கிராம் பவுன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.
14 minute ago
4 hours ago
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
4 hours ago
14 Dec 2025
14 Dec 2025