Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2024 ஜனவரி 18 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு பல்கலைக்கழக பொது மாணவர் சங்கம் இன்று (18) ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்குமாறு குருந்துவத்தை பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நிராகரித்தார்.
பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் தடுக்கப்படுமாயின் அது அரசியலமைப்பின் பதினான்காம் சரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும் என நீதவான் சுட்டிக்காட்டினார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106ஆவது பிரிவின் கீழ் பொதுமக்களின் துன்பங்களைத் தடுக்கும் நோக்கில் குருந்துவத்த பொலிஸ் பொறுப்பதிகாரி இந்தக் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளதாக நீதவான் தெரிவித்தார். இவ்வளவு அவசரமும் தேவையும் இருப்பதாக முதன்மையான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
7 hours ago