2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பொது மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிப்பு

Freelancer   / 2023 செப்டெம்பர் 05 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலி வடக்கு அன்ரனிபுரத்தில்  அண்மையில் விடுவிக்கப்பட்ட அரச காணிகள் பொது மக்களுக்கு இன்று(05/09) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்ற வலி வடக்கை பூர்வீகமாக கொண்ட சுமார் 49 குடும்பங்களுக்கு ஒன்றரை பரப்பு வீதம் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

குறித்த பிரதேசம் உயர் பாதுகாப்பு பிரதேசமாக இருந்து வந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கடந்த பெப்ரவரி மாதமளவில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன், விடுவிக்கப்பட்ட அரச காணிகளை முகாம்களில் வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளும் அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குலுக்கல் முறையில் காணிகளை தெரிவு செய்து பயனாளர்களுக்கு வழங்கி வைத்த இன்றைய நிகழ்வில் அரச அதிகாரிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

எம்.றொசாந்த் 

நிதர்ஷன் வினோத்

யது பாஸ்கரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .