Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Editorial / 2023 மே 03 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெற்றோர் தமது குழந்தைகளை சாலைகளில் கைவிட்டுச் சென்ற அறுபது சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் கடந்த வருடம் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தைப் பிரிவு ஆணையாளர் என். ஐ. லியனகே தெரிவித்துள்ளார்.
ஆகையால் வளர்க்க முடியாத மூன்று மாதங்களுக்கும் குறைவான சிசுக்களை பராமரிக்க மாகாண ரீதியிலான கருமபீடங்களை நிறுவ முடிவெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நடவடிக்கையை அமுல்படுத்துவதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டு வருவதாக திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பல்வேறு காரணங்களால் 80 சிறுவர்கள் குறித்த காலத்தில் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் சிறுவர் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை ஆணையாளர் தெரிவித்தார்.
குழந்தைகளைப் பொறுப்பேற்கும் குறித்த கருமபீடங்களில் சிசுக்களைக் ஒப்படைக்கும் பெற்றோர் மீது சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட மாட்டாது எனவும் இந் நடவடிக்கைக்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் கையளிக்கப்படும் எனவும் லியனகே மேலும் தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, நீதி அமைச்சு மூலம் இப்புதிய சட்டங்கள் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago