2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

பெட்ரோல் குண்டு வீச்சில் குழந்தை பலி

Editorial   / 2025 மார்ச் 31 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டின் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதலில் காயமடைந்த 05 வயதுடைய குழந்தை ஞாயிற்றுக்கிழமை (30) மாலை உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

 களுத்துறை, ராஜாவத்த, கமகொட வீதியில் வசித்து வந்த செனல் சந்தீப என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த 29 ஆம் திகதி இரவு 8.50 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்கு ஆளான குழந்தை, களுத்துறையில் உள்ள நாகொட போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் பொரள்ளை  லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை உயிரிழந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .