2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பெசிலுக்காக கொளுத்திய பட்டாசு பற்றைக்காட்டை எரித்தது

Editorial   / 2022 பெப்ரவரி 03 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகலில் புதிய மூன்று மாடி பிரதேச சபைக் கட்டிடத்தின் திறப்பு விழா   நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் தலைமையில் நேற்று (02)இடம்பெற்றது.

அவர்கள் உள்ளிட்ட விருந்தினர்களை வரவேற்கும் வகையில், பிரதேச சபைக் கட்டிடத்துக்கு அண்மையில் உள்ள பற்றைக்காட்டுக்கு அருகில் வைத்து பட்டாசு கொளுத்தப்பட்டது.

படபடவென வெடித்த பட்டாசுகளில் இருந்து பறந்த தீப்பொறிகள், பற்றைக்காட்டை கொளுத்திவிட்டது. அதன்பின்னர், மேற்கொள்ளப்பட்ட கடும் முயற்சியை அடுத்து, தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .