2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

புலி தங்கம் தேடிய நால்வர் கைது

Editorial   / 2024 ஏப்ரல் 22 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தை அண்டிய இடத்தில் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை மீட்பதற்காக குழி தோண்டினர் என்ற சந்தேகத்தின் பேரில் கடற்படை வீரர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாக சிலாவத்துறை கடற்படை தெரிவித்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சிலாவத்துறை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கடற்படை சிப்பாய் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வந்ததாக கூறப்படும் இடத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30-38 வயதுடைய நாவுல, மெனிக்தென மற்றும் அனுராதபுரத்தை சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் சாரதி எனவும் மற்றையவர் தொழிலாளி எனவும் பொலிஸ் விசாரணைகளின் போது அடையாளம் காணப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .