Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2024 ஜூலை 23 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
விடுதலைப் புலிகளால் யுத்த காலத்தில் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் - தங்கம் ஆகியவற்றைக் கண்டறியும் விசேட ஸ்கேனர் இயந்திரத்தைப் பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் உட்பட மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோய் சுமனவர்தன தலைமையில், மன்னார் முகாம் கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகரின் பரிந்துரைக்கமைய, மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்பாடு வீதி, தாராபுரம் பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய தேடுதலில் இவர்கள் கைது செய்யப்படுள்ளனர்.
குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான இராணுவ சிப்பாய் மற்றும் வவுனியா, அனுராதபுரம் மற்றும் கடுவெல பகுதிகளில் வசிக்கும் 29 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று பேர் மடிக்கணினியயுடன் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago