Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 செப்டெம்பர் 22 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்தேகத்துக்கு இடமான திரவம் அடங்கிய இன்ஹேலர்கள் சில, பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளில் இருந்து மீட்கப்பட்டதாக கொக்கரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை மாணவர்கள் சிலரின் புத்தகப் பைகளில் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து அவற்றை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனைச் செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் வர்த்தகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கொக்கரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
அவர், கொக்கரெல்ல பிரதேசத்தில் அலைபேசி மற்றும் அலைபேசிக்கான உபகரணங்களை விற்பனைச் செய்யும் விற்பனை நிலையத்தை நடத்திச் செல்பவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் ஒன்பதாம் தரத்தில் கல்விப்பயிலும் மாணவர்கள் சிலரின் பாடசாலைப் புத்தகப்பையை அந்த வகுப்பாசிரியர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இவை கைப்பற்றப்பட்டன. அதன்பின்னர் அவ்வாசிரியர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் சந்தன அபேசிங்கவின் பணிப்புரையின் பேரில் வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த கித்சிறி ஜயலதின் பூரண மேற்பார்வையின் கீழ் கொகரெல்ல பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் விஜேரத்ன தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago