2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பிள்ளைகளை தாக்கி வீடியோ வெளியிட்ட தந்தை கைது: காணொளி

Mayu   / 2024 பெப்ரவரி 07 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது இரண்டு பிள்ளைகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட தந்தை ஒருவர் இன்று (07) கைது செய்யப்பட்டதாக திம்புல்ல பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆனந்தசிறி தெரிவித்தார்.

திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள தனது மனைவி வீட்டில் வசிக்கும் 33 வயதுடைய நபர் கடந்த (05) திங்கட்கிழமை 09 மற்றும் 05 வயதுடைய தனது இரண்டு பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி தெரிவித்தார்.

இதற்கமைய, பிள்ளைகளின் தாயார் வெளியூரில் இருப்பதாகவவும், பிள்ளளைகள் பாட்டியின் பராமரிப்பில் இருப்பதாகவும், பிள்ளைகளின் கொழும்பில் உள்ள கார் சுத்தம் செய்யும் மையத்தில் பணிபுரிந்து வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரஞ்சித் ராஜபக்க்ஷ ,கௌசல்யா 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .