2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

பிரபல பாடகர் இலங்கைக்கு விஜயம்

Janu   / 2025 மார்ச் 10 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் ஆலோ பிளாக், இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு திங்கட்கிழமை (10)  காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தார்.

 உலகெங்கிலும் உள்ள 22 நாடுகளில் இசை தரவரிசையிலும் அமெரிக்காவில் கிராமி விருதுகளுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களிலும்  முதலிடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சுகாதார துறையில் முதலீட்டுத் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர் கோமிக உடுகமசூரியவின் அழைப்பின் பேரில் அவர்  இலங்கை வந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவருக்கு இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோரால் வறவேற்கப்பட்டுள்ளார். 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட பிளெக், இலங்கை முதலீட்டிற்கு ஒரு கவர்ச்சிகரமான இடம் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டுவதில் ஒரு பங்காளராக இருக்க விரும்புவதாகவும், இலங்கை அரசாங்கத்துடனும் தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டத்திற்கான ஆரம்ப கட்ட திட்டங்களுடன்  ஒத்துழைப்புடன் செயற்பட இது சிறந்த வாய்ப்பு என்றும் கூறினார்.

தற்பொழுது காணப்படும் மற்றும் புதிய நிறுவனங்கள் ஆகிய இரு பிரிவுகளும் உள்ளடங்கியதாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு முதலீடுகள் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் புதிய கருத்துக்களை மேற்பார்வை செய்ய  சந்தர்ப்பம்  கிடைத்திருப்பது மிகவும்  தனித்துவமானது என்று குறிப்பிட்ட  அலோ பிளெக், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள பல முதலீட்டாளர்களுடன் தான்  மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதாகவும், இலங்கையில் காணப்படும் மூலங்கள் குறித்து  அவர்களுடன்  கலந்துரையாட தான் எதிர்பார்ப்பதாகவும்  கூறினார்.

அவரின் ‘I Need a Dollar’  ('ஐ நீட் எ டாலர்') மற்றும்  ‘Wake Me Up’(வேக் மீ அப்') போன்ற   பாடல்கள் உலகளவில் மிகவும் பிரபலமான பாடல்களாகும். அலோ பிளெக்கின்  எமது நாட்டுக்கான  வருகை  உயிரியல் தொழில்நுட்பம், சுகாதார சேவை புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் அவர் கொண்டுள்ள ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.

இலங்கையில் மூன்று நாள் தங்கியிருக்கும் அவர், உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் கலைஞர்களைச் சந்தித்து, கலாசார மற்றும் அறிவியல் துறைகளில் ஒத்துழைப்புகளை  மேம்படுத்த உள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர்  ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பல கலந்துரையாடல்கள் நடத்த உள்ளதோடு இலங்கை கருவா, மரமுந்திரிகை உற்பத்திகள், தெங்கு சார்ந்த பொருட்கள்,  சேதனப் பொருட்கள், சக்திதரும் இயற்கை பானங்கள், உணவு மற்றும் விவசாயம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற உள்ளூர் தொழில்முனைவோரையும் சந்திக்க உள்ளார்.  இது தவிர அலோ பிளெக்  உயிரியல் தொழில்நுட்ப நிபுணர்களுடனும்  முதலீட்டாளர் மாநாடுகளிலும் பங்கேற்க இருக்கிறார். மேலும் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் மற்றும் புத்தாக்குநர்களுடன் பல சந்திப்புகளிலும் அவர் பங்கேற்க உள்ளார். சீகிரிய, மின்னேரியா உள்ளிட்ட கலாசார முக்கியத்துவம்வாய்ந்த இடங்களையும் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.

இசை, தொழில்முனைவு மற்றும் சமூக சேவை நடவடிக்கைகளில் ஆலோ  பிளெக் மிகுந்த முகாமைத்துவத்துடன் ஈடுபட்டு வருகிறார்.  ஒரு விஞ்ஞானியாக வர  ஆசைப்பட்ட அவர்  2022 ஆம் ஆண்டு கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான  உயிரியல்த் தொழில்நுட்ப தீர்வுகளில் விசேட கவனம் செலுத்தி Major Inc.  நிறுவனத்தை ஆரம்பித்தார்.  அமெரிக்க கடற்படை வீரரான  ஆலோ  பிளெக்கின் தந்தையின் ஊக்கத்தினால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், தற்போது உலகின் முன்னணி விஞ்ஞானிகளுடன் இணைந்து வைரஸ் தொற்றுகளை எதிராக செயற்பட்டு வருகிறது.

உயிரியல்  தொழில்நுட்பத்திற்கு அப்பால், புத்தாக்கம் மீதான அவரின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில்  பொலிகிராப் மற்றும் ஜிரோப்டிக் போன்ற தொழில்நுட்ப  வர்த்தகங்களிலும்  அவர் முதலீடு செய்துவருகிறார்.

இந்த வணிக நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக,   அலோ பிளெக் இசை மற்றும் சமூக சேவை நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். அவரது அண்மைய  இசைவெளியீடான Stand Together -2025 ஊடாக , ஒற்றுமை மற்றும்  தாங்கும் இயலுமையை ஊக்குவிக்கிறது.

அலோ பிளெக்கின் இலங்கை விஜயம் அவரது இசை நிபுணத்துவத்தை மட்டுமல்ல, புத்தாக்கம், அறிவியல் மற்றும் சமூகப் பொறுப்பு மீதான அவரது ஆர்வத்தையும் எடுத்துக்காட்டுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .